
பிரித்தானிய மகாராணி மறைந்த இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு இன்று இடம்பெறவுள்ளது.
இறுதி சடங்கில் அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் பங்கேற்கவுள்ளனர்.
அத்துடன், மகாராணியின் இன்றைய இறுதி நிகழ்வில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதியின் பாரியார் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் மறைந்த எலிசபெத் மகாராணியின் உ டலுக்கு நேற்று (18) இறுதி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.