உலகளாவிய ரீதியில் நோயாளிகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், தனிநபர்கள் சுகாதாரப் பாதுகாப்பை பராமரிப்பதில் ஊக்குவிப்பதற்காகவும் பூமியில் உள்ள ஒவ்வொருவரும் வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் உடல்நல குறைபாட்டுக்காக மருத்துவ உதவியை நாடியிருப்போம்.
நோயாளி பாதுகாப்பு பற்றி உலகளாவிய புரிதலை மேம்படுத்த, சுகாதார பாதுகாப்பில் மக்கள் பங்களிப்பை அதிகரிக்க வலியுறுத்தியும் உலக சுகாதார நிறுவனம் சார்பில் செப். 17ல் உலக நோயாளி பாதுகாப்பு தினம் கடைபிடிக்க படுகிறது. பாதுகாப்பற்ற மருத்துவம், மருந்துகளில் தவறு போன்றவை உலகளவில் சுகாதாரத்தில் தவிர்க்க கூடிய தீங்குகளுக்கு காரணமாக உள்ளது. ‘தீங்கு விளை விக்காத மருந்து’ என்பது இந்தாண்டு மையக்கருத்து.