
லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் வைக்கப்பட்டுள்ள இங்கிலாந் ராணி எலிசபெத்தின் உடலுக்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் வயது மூப்பு காரணமாக கடந்த 8ம் தேதி தனது 96வது வயதில் காலமானார்.
ராணியின் உடலுக்கு வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனைக்கு ராணுவ மரியாதையுடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அங்கு அமைக்கப்பட்டுள்ள மேடையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ராணிக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக லட்ச கணக்கான மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். சுமார் 8கி.மீ. தொலைவிற்கு நீண்ட வரிசையில் காத்து கிடைக்கும் மக்கள் மழையையும் பொருட்படுத்தாமல் அதிகாலை முதலே ராணிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ராணியின் இறுதி சடங்கு வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதில் உலகின் பல்வேறு தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அமெரிக்க ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் உள்ளிட்டோர் ராணியின் இறுதி சடங்கில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளனர். இந்திய குடியரசு தலைவர் திரெளபதி முர்மு ராணியின் இறுதி சடங்கில் கலந்து கொள்கிறார்.