
மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதி எதிர்வரும் 17ஆம் திகதி பிரித்தானியா செல்லவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு கிரேட் பிரிட்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் கதீட்ரலில் வரும் 19 ஆம் திகதி நடைபெற உள்ளது.
இதேவேளை, இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்காக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள இரங்கல் குறிப்பேட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் குறிப்பொன்றை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மகாராணியின் மறைவுக்கு பிரித்தானிய அரச குடும்பம், அரசாங்கம் மற்றும் மக்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார்.