பாகிஸ்தானில் பெய்து வரும் கன மழையால் இதுவரை 1,300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் நான்கில் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில், ஜூன் 14ல் இருந்து கன மழை கொட்டுகிறது. நாடு முழுதும் 1,300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வீடுகளை இழந்த 15 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கி 7.36 லட்சம் கால்நடைகள் பலியாகியுள்ளன. நாடு முழுதும் மூன்று கோடி பேர் வாழ்வாதாரங்களை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான், தற்போது இயற்கை பேரிடரால் தவிக்கும் நிலையில், பிரான்ஸ் உட்பட உலகின் பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. வெளிநாட்டு உதவியுடன் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் ராணுவம் இணைந்து மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.