சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகின்றனர். விரைவில் மண்டல காலம் தொடங்கப்பட இருக்கிறது. ஐயப்பன் கோயிலை அழகுப்படுத்தவும், கம்பீரமான தோற்றத்தை அளிக்கவும், அதன் மேற்கூரை முழுவதும் தங்க தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த தங்க மேற்கூரையில் இருந்து நீர் கசிவது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, மேற்கூரையை சீரமைக்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு தீர்மானித்தது. இதற்கான பணிகள் கடந்த மாதம் 30ம் தேதி தொடங்கியது. தலைமை சிற்பியான பழனி ஆசாரி தலைமையில் இப்பணிகள் நடந்தன. 3 நாட்களுக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் தொடர்ந்து மழை பெய்ததால் பணிகள் முடிய தாமதமானது. இந்நிலையில் நேற்று முன்தினத்துடன் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்தன.