ஸ்பெயின் நாட்டின் பியுனோல் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் கலாச்சார திருவிழாவின் தக்காளி சண்டை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தக்காளியை ஒருவர் மீது ஒருவர் ஒருவர் வீசி சண்டை போடும் திருவிழா நடைபெறும்.
கொரோனா தொற்றால் கடந்த 2 ஆண்டுகளாக இந்த விழாவை நடத்த அரசு தடை விதித்திருந்தது. நடப்பாண்டில் தக்காளி சண்டை திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
சுற்றுலாப் பயணிகளிடையே மிகுந்த ஆதரவைப் பெற்ற இந்த நிகழ்ச்சி நடைபெற்றபோது ஒருவர் மீது ஒருவர் வீசிக்கொண்ட தக்காளிகளால் தெரு முழுவதும் தக்காளிக் கூழினால் சிவந்து காணப்பட்டது.
சுமார் 130 டன் தக்காளி திருவிழாவுக்காக பயன்படுத்தப்பட்டது. கடந்த 1945ம் ஆண்டில் தக்காளி விளைந்திருந்த பகுதிகளில் வாழ்ந்துவந்த உள்ளூர் குழந்தைகள் உணவுக்காக தக்காளியை வீசியெறிந்து சண்டையிட்டு கொண்டதை கண்டே இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது என்று தகவல்கள் குறிப்பிடுகின்றன.
ஸ்பெயினில் நடந்த இந்த விழாவைக் காண, உலகம் முழுவதிலும் இருந்து, ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள், புணால் நகருக்கு படையெடுத்தனர்.