பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 6.5 லட்சம் கர்ப்பிணி பெண்கள் மகப்பேறு சிகிச்சை கிடைக்காமல் தவிப்பதாக ஐநா தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் முதல் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுவரை 375.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 1,100க்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பல கோடி வீடுகளை இழந்து வேறு பாதுகாப்பான இடங்களிலும், நிவாரண முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 7.35 லட்சம் கால்நடைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஐநா.வின் மக்கள்தொகை நிதியம் வெளியிட்ட அறிக்கையில், ‘பாகிஸ்தான் வெள்ளத்தில் சிக்கி 6.5 லட்சம் கர்ப்பிணி பெண்கள் மகப்பேறு சிகிச்சைக்காக தவித்து வருகின்றனர். இவர்களில் நிறைமாத கர்ப்பிணியான 73,000 பேருக்கு அடுத்த மாதம் பிரசவம் நடைபெற உள்ளது.
ஆனால், இவர்களுக்கு பிரசவம் பார்ப்பதற்கு அனுபவமிக்க மருத்துவர்கள், உதவியாளர்கள் போதிய அளவில் இல்லை,’ என்று கூறப்பட்டுள்ளது.