
நாட்டில் இன்று முதல் அமுலுக்குவரும் வகையில் சிகரெட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய 3, 5, 10 மற்றும் 15 ரூபாவினால் சிகரெட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இன்று முதல் அமுலுக்குவரும் வகையில் வட் வரி 12 வீதம் முதல் 15 வீதம் வரை அதிகரிக்கப்பட்ட நிலையிலேயே, இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.