அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவி ஜில் பைடனுக்கு மீண்டும் இன்று(ஆக.,25) கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவி ஜில் பைடனுக்கு கடந்த ஆக.,15ம் தேதி கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டு, தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு குணமடைந்தார்.
இந்நிலையில் இன்று(ஆக.,25) ஜில் பைடனுக்கு மீண்டும் கோவிட் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தெற்கு கரோலினாவுக்கு ஜோ பைடனுடன் சென்று வந்த நிலையில் ஜில் பைடனுக்கு கோவிட் பாதிப்பு உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.