க.பொ.த உயர்தர பரீட்சை எழுதிவிட்டு, பெறுபேற்றுக்காக காத்திருந்த மாணவனே பலியானவர் ஆவார். பரீட்சை எழுதி முடிந்ததும் பெறுபேறு வரும் வரைக்குமுள்ள காலப்பகுதிக்குள் SMART PHONE. பானையில் மூழ்கியிருந்த இம் மாணவனுக்கு, பெற்றோர் மற்றும் சகோதரர்கள் அறிவுரைகள் கூறியும் கேட்காது தொடர்ந்து அதிலேயே நேரகாலத்தை கழித்து வந்துள்ளார்.
இரவு வேளைகளில் தனது படுக்கையறைக்குள் சென்று கதவை தாழ்ப்பாளிடும் இவர் எத்தனை மணிக்கு உறங்குகிறார் என்று கூட தெரியாத நிலையில் காலையில் 10.00 மணிக்குப்பின்பே எழுந்திருப்பார்.
அவரது அறைக்குள் எவரையுமே உள்ளே வர அனுமதிக்கமாட்டார்.
சம்பவ தினமான 21/08 அன்று காலை 10.00 மணியாகியும் எழுந்திருக்காத இவரை, இவரது பெற்றோர் கதவில் தட்டி சத்தமிட்டு அழைத்த போதும் எதுவித பதிலும் வராததால் அவரது சகோதரன் வீட்டின் கூரை மேல் ஏறி ஓடுகளை அகற்றி படுக்கையறையினை அவதானித்த போது, “சாறியொன்றினால் கழுத்தில் சுருக்கிட்டு வீட்டு வளையில் தொங்கி மரணித்திருப்பதை “கண்டுள்ளார்.
இவருக்கு அருகாமையில் அவரால் எழுதப்பட்ட காகிதம் ஒன்றும் இருந்துள்ளது.
குறித்த இடத்துக்கு சந்திவெளி பொலிசாருடன் சென்ற பிரதேச மரண விசாரணை அதிகாரி MSM நஸீர் விசாரணைகளை முன்னெடுத்தார். இவரது கைத் தொலைபேசியினை பரீட்சித்த போது தொடர்ந்து PUBG விளையாட்டிலேயே தனது நேரகாலத்தை கழித்து அதற்கு அடிமையாகிருந்தது தெரிய வந்தது.
மேலும் அவரால் எழுதப்பட்ட காகிதத்தில் “எனது சாவுக்கு யாருமே காரணமில்லை, எனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை ” என்று நீண்ட கடிதமொன்றே எழுதியிருந்தார்.
பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் (22/08)உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அன்பின் இளைஞர் யுவதிகளே,
தொடரான SMART PHONE பாவனையிலிருந்து எம்மை விடுவித்து, உறவுகளோடு சங்கமித்து ஆரோக்கியத்தையும் மன ஆறுதலையும் பெறுவோம்.