கோவிட்டிற்கு எதிரான போரை வெற்றிகரமாக எதிர்கொண்டுவிட்டோம் என வடகொரியா அறிவித்துள்ளது. அதே நேரம் அந்நாட்டு அதிபர் கிம்ஜோங் உன் கடுமையாக காய்ச்சலால் அவதியுற்றுவருவதாகவும் அவரது சகோதரி தெரிவித்துள்ளார்.
முதல் உலகம் முழுவதும் சுமார் 58.6 கோடி மக்கள் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 64.2 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். கோவிட் தொற்றினை எதிர்கொள்வதில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் வெற்றிகரமாக கையாண்ட நிலையில், வடகொரியா தனது தன் பாணியில் நடவடிக்கை எடுத்தது.
பாதிப்பு எண்ணிக்கையை வெளிப்படையாக உலகிற்கு காட்டவில்லை. மாறாக கோவிட் பாதிப்பு என்று குறிப்பிடாமல் ”காய்ச்சல்’ என கோவிட் பாதிப்பை மறைமுகமாக வடகொரியா குறிப்பிடுகிறது.