
அரசியல் கிளர்ச்சிகளின் ஊடாக ராஜபக்சக்களின் அரசியல் எதிர்காலத்தை முடிவுறுத்திவிட இயலாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அனைத்து அரசியல்வாதிகளினதும் எதிர்காலம் மக்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயே நிர்ணயம் செய்யப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிளர்ச்சியொன்றினால் அரசியல் எதிர்காலங்கள் நிர்ணயம் செய்யப்படுதற்கு தாம் இடமளிக்கப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயக ரீதியான தேர்தல் ஒன்றின் மூலம் தம்மை வெற்றிபெறச் செய்யவோ அல்லது தோல்வியடையச் செய்யவோ மக்களுக்கு அதிகாரம் உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
போராட்டம் முன்னெடுக்கப்பட்டத்தில் எவ்வித பிரச்சினையும் தமக்கு கிடையாது எனவும் அவர்களின் சில பரிந்துரைகள் மிகவும் பெறுமதி வாய்ந்தவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், போராட்டக்காரர்கள் ஜனநாயக விரோத முறையில் அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்
வன்முறைகளைத் தூண்டக் கூடிய வகையிலான சகல போராட்டங்களையும் தாம் நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.