
மலையகத்தில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை நால்வர் மரணித்துள்ளதுடன், மூவர் காணாமல் போயுள்ளனர்.நோட்டன்-பிரிட்ஜ் டெப்லோ பகுதியில் நேற்று காலை ஏற்பட்ட மண்சரிவால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன.
மண்சரிவில் சிக்கியே குறித்த நபர் உயிரிழந்துள்ளதுடன், அவரது சடலம் பொலிஸ், இராணுவத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் டெப்லோ குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை ஹட்டன்- பன்மூர் குளத்தில் வழுக்கி விழுந்து எபோட்சிலி தோட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நாவலப்பிட்டி- கெட்டபுலா அக்கரவத்த பகுதியில் வெள்ளத்தில் சிக்கி பெண்ணொருவரும் ஆண்கள் இருவரும் காணாமல் போயுள்ளனர்.
மேலும் நேற்று (1) அம்பகமுவ- பொல்பிட்டி பகுதியில் 5 வயது சிறுமி ஒருவரும் அவரது பாட்டியும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.