
புதுக்குடியிருப்பு பிரதேச செயலரின் உத்தியோகபூர்வ தங்குமிடத்தின் மலசல கூடத்தில் இருந்து 50 லீட்டர் டீசல் , 10 லீட்டர் பெட்ரோல் மற்றும் 5 லீட்டர் மண்ணெண்ணெய் என்பன மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தனது அலுவலக தேவைக்கக்காகவும் , சொந்த தேவைக்காகவும் சேமித்து வைத்த எரிபொருளே என பிரதேச செயலர் தெரிவித்துள்ளார்.
இதன்போது மீட்கப்பட்ட எரிபொருளை புதுக்குடியிருப்பு பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.