சீன ஆய்வுக் கப்பல், இந்தியா ஆத்திரம், ரணில் என்ன செய்யப் போகிறார்..?

ஹம்பாந்தோட்டை துறைமுகம் நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் சீன கப்பல் தொடர்பில் விவாத நிலை ஏற்பட்டுள்ளது.

 

சீனாவின்  ஆய்வுக் கப்பலான Yuan Wang 5 எனும் கப்பல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்மிக்கவுள்ளதாக Reuters செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவின் சியாங் துறைமுகத்திலிருந்து கடந்த 13 ஆம் திகதி பயணத்தை ஆரம்பித்த கப்பல், சீனாவின் கிழக்கு கடலில் தற்போது பயணித்துக்கொண்டிருக்கிறது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தந்து , வசதிகளை ஏற்படுத்திக்கொண்டதன் பின்னர் குறித்த கப்பல் இந்திய பெருங்கடலில் ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனிடையே, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் தாக்கம் செலுத்தும் சகல விடயங்கள் தொடர்பிலும் மிகுந்த  அவதானத்துடன் செயற்படுவதாக இந்தியா தெரிவித்துள்ளது.

பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பதற்கு தயாராக இருப்பதாக இந்திய வெளிவிகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரமானது ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கி, சர்வதேச நாடுகளிடம் உதவிக்காக காத்திருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு மிகப்பெரும் இக்கட்டான நிலையை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE