
சட்டவிரோதமாக தங்கத்தை கொண்டு செல்ல முயன்ற மூவர் மன்னார் – பேசாலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 09 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
பேசாலை கடற்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது நேற்றிரவு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
470 கிராம் தங்கமும் வலம்புரி சங்கு ஒன்றும் சந்தேகநபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
புத்தளம் மற்றும் பேசாலையை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.