சுமார் 177 பவுண் தங்க ஆபரணங்களைக் களவாடிய 4 சந்தேகநபர்கள் ஹட்டன் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நோர்வூட் நகரில் உள்ள அடகு பிடிக்கும் நிலையம் ஒன்றில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி குறித்த தங்க ஆபரணங்கள் களவாடப்பட்டிருந்தன.
இவற்றின் பெறுமதி 3 கோடியே 54 இலட்சம் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில், ஹட்டன் காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணைகளுக்கமைய,சுமார் 6 மாதங்களின் பின்னர் நேற்றைய தினம் பெண் ஒருவரும் 3 ஆண்களுமாக 4 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து தங்கச்சங்கிலிகள், பெண்டன்கள், மோதிரங்கள் உள்ளிட்ட பல ஆபரணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் குறித்த ஆபரணங்களுடன் சந்தேகநபர்களை, இன்றைய தினம் ஹட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் காவல்துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.