ஆசிய நாடான இந்தோனேஷியாவின் கடல் பகுதியில் மூழ்கிய சரக்கு கப்பலில் இருந்த 25 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தோனேஷியாவின் மகாச்சர் துறைமுகத்தில் இருந்து கல்மாஸ் தீவுக்கு சரக்கு கப்பல் ஒன்று சமீபத்தில் புறப்பட்டது. கடந்த 26ம் தேதி இந்தக் கப்பல் கடலில் மூழ்கியது.முதலில் இது பயணியர் கப்பல் என்று கருதப்பட்டது. அதன்பிறகே சரக்கு கப்பல் என்பது உறுதி செய்யப்பட்டது. இதில் 42 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. அதில் 17 பேர் மீட்கப்பட்டனர்.மீதமுள்ள 25 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.