நாட்டில் எதிர்காலத்தில் முட்டை ஒன்றின் விலை 50 ரூபாவாகவும் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை ஆயிரத்து 200 ரூபாவாகவும் அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் அஜித் குணசேகர இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
தங்களது தொழில்துறைக்கு தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு டொலர்கள் கிடைக்காத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உரம் கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகள் எரிபொருள் நெருக்கடி காரணமாக விவசாயத்தை தொடர முடியாமல் தவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.