
இந்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டம் இன்று (30) நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.
புதிய அமைச்சரவை பதவியேற்ற பின்னர் நடைபெறும் இரண்டாவது அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும்.
எவ்வாறாயினும், சர்வகட்சி அரசாங்கம் அமுலில் உள்ளதாகவும், இந்த வாரத்தில் மேலும் பல அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட 25 உறுப்பினர்களுக்கு அமைச்சரவை மட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.