நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு மக்களிடம் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்தனர். வகுப்புவாத வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 13 கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக அறிக்கை விடுத்தனர்.