ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஈலோன் மஸ்க் முன்வந்துள்ளார்.
முன்னதாக, ஈலோன் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தில் 9.2 சதவீத பங்குகளை வைத்திருந்ததால், நிர்வாகக் குழுவில் இணைய அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், நிர்வாகக்குழுவில் இணைய ஈலோன் மஸ்க் மறுத்துவிட்டார்.
இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தை வாங்க ஈலோன் மஸ்க் முன்வந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், ட்விட்டர் நிறுவனத்தை வாங்க அந்நிறுவனத்திற்கு ஒவ்வொரு பங்குக்கும் 54.20 டாலர்கள் செலுத்துவதாகக் கூறியுள்ளார். அதன் மதிப்பு சுமார் 40 பில்லியன் டாலர்கள் ஆகும்.
மேலும், தன்னுடைய இந்த முடிவு ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால், “ட்விட்டர் நிறுவனத்தின் பங்குதாரராக என்னுடைய பொறுப்பை மறுயோசனை செய்ய வேண்டிவரும்” என அவர் தெரிவித்துள்ளார்.