
மினுவாங்கொடையில் போலி நாணயத்தாள்களுடன் 29 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரிடமிருந்து 1000 ரூபா நாணயத்தாள்கள் 34, சில 5,000 ரூபா நாணயத்தாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் நாணயத்தாள்களை அச்சிட பயன்படுத்தப்படும் இயந்திரமொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபரை மினுவாங்கொடை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போலி நாணயத் தாள்கள் புழக்கத்தில் இருக்கக்கூடும் என்பதால், பொதுமக்கள் அது குறித்து தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.