சட்டவிரோதமான முறையில் பெற்றோல் மற்றும் டீசலை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களை கண்டுபிடிக்கும் விசேட நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டத்தின் பிரகாரம், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மட்டுமே எரிபொருள் சேகரிப்பு மற்றும் விற்பனை பிரதானமாக அனுமதிக்கப்பட்டுள்ளதால், எரிபொருளை வைத்து தனியாருக்கு விற்பனை செய்வது சட்டவிரோதமானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான எரிபொருள் இருப்புக்களை சேகரித்து விற்பனை செய்த இரண்டு குழுக்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று முதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அனுமதிப்பத்திரம் இன்றி எரிபொருள் சேகரித்து அதிக விலைக்கு விற்பனை செய்த 68 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர்களிடம் இருந்து 8025 லீற்றர் பெற்றோல் மற்றும் 726 லீற்றர் டீசல் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.