
ரஷ்யாவுக்கு எதிராக மேலும் புதிய பொருளாதார தடைகளை விதிக்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
ரஷ்ய அரச அதிகாரிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் அரச நிறுவனங்களை இலக்குவைத்து இந்த வார இறுதியில் பொருளாதார தடைகளை விதிக்கவுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
யுக்ரேனின் Bucha நகரில் ரஷ்ய படையினர் மேற்கொண்டுள்ள போர்க் குற்றங்களை அடுத்து, இந்த தீர்மானம் எடுக்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
எவ்வாறாயினும், தாம் எந்த போர் குற்றங்களிலும் ஈடுபடவில்லை என ரஷ்யா மறுத்து வருகின்றது.