
எதிர்வரும் திங்கட்கிழமை, எரிவாயு தாங்கிய மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடைய உள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்தக் கப்பலில் 3,500 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கியுள்ளதாக அந்த நிறுவத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், கப்பல் ஒன்றிலிருந்து தரையிறக்கப்பட்டுள்ள 3,800 மெட்ரிக் டன் எரிவாயுவை விநியோகிக்கும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றதென லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.