
எழுவர் விடுதலை தீர்மானத்தில் பேரறிவாளன் விவகாரம் மட்டும் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளதா? அல்லது ஏழு பேர் விடுதலை தீர்மானமும் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளதா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது. தமிழக அரசு விளக்கம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. ஆளுநர் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் அமைச்சரவை தீர்மானத்தின்படி தன்னை விடுவிக்க கோரி நளினி வழக்கு தொடர்ந்திருந்தார். நளினி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பியது.