
சூரியனில் நேற்று 8 முறை காந்தப் புயல் வீசியதாக கொடைக்கானலில் உள்ள வான் இயற்பியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்திருக்கிறது.
சூரிய காந்தப் புயல் குறித்து கொடைக்கானல் சூரியவியல் விஞ்ஞானி குமரவேல் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். சூரிய காந்தப் புயல் வீசுவதை கண்காணிக்க கொடைக்கானல் மையத்தில் விஞ்ஞானிகள் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.