அரிசி, சீனி, பருப்பு, மிளகாய் ஆகிய பொருட்கள் அடங்கிய மேலும் ஆயிரம் கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அவற்றை விரைவில் விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் நிஹால் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மேலதிக உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு டொலர் பற்றாக்குறை தடையாகவுள்ளதாக அவர் கூறினார்.
எவ்வாறாயினும், போதியளவு உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக நிஹால் செனவிரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.