
மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில் நீர் இறைப்பதற்கான இயந்திரங்களை இயக்கும் நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்படுவதால் கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் மின்பிறப்பாக்கி இயந்திரங்களை பயன்படுத்தி முடியுமான அளவு நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுவதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீருக்கான கேள்வி அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பொது மக்களிடம் கோரியுள்ளது