உலகில் முதல் முறையாக மனித ரத்தத்தில் சிறிய பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பது நெதர்லாந்தில் உள்ள பல்கலை பேராசிரியர்கள் 22 பேரிடம் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் உள்ள பல்கலை நடத்திய ஆய்வில், ரத்தத்தில் சிறிய நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் கலந்துள்ளது முதன்முறையாக கண்டறியப்பட்டுள்ளது.இது தொடர்பாக பல்கலை ஆராய்ச்சியாளர்கள் ஆரோக்கியமான ரத்த நன்கொடையாளர்கள் 22 பேரின் ரத்த மாதிரிகளில் நடத்தப்பட்ட 5 வகையான பரிசோதனைகளில் 17 பேருக்கு ரத்தத்தில் சிறிய நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது தெரியவந்துள்ளது. ஒவ்வொரு மி.லி., ரத்தத்திலும் சராசரியாக 1.6 மைக்ரோகிராம் பிளாஸ்டிக் பாலிமர்களை கொண்டிருந்தன. ரத்தத்தில் உள்ள பிளாஸ்டிக்கினால் என்னவிதமான பாதுகாப்பு, அதிக பிளாஸ்டிக்கினால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து தெளிவாக தெரியவில்லை.
சில ரத்த மாதிரிகளில் இரண்டு அல்லது மூன்று வகையான பிளாஸ்டிக் துகள்கள் இருந்தது. அதேநேரத்தில் பரிசோதனை செய்யப்பட்ட நான்கில் ஒரு பகுதியினரின் ரத்தத்தில் எந்த பிளாஸ்டிக் துகள்களும் கண்டறியப்படவில்லை. மனித ரத்தத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பிளாஸ்டிக் துகள்களால் உடலுக்கு பாதுகாப்பானதா கேடுகளை விளைவிக்க கூடியதா என்பது குறித்து 5 முதல் 10 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்தால் தான் முழுமையாக தெரியவரும். இது தொடர்பாகஆராய்ச்சி நடந்து வருகிறது.