
சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் தமது பயணங்கள் தொடர்பான விபரங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதை தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறு பயணங்கள் தொடர்பான விபரங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதனால குற்றவாளிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளக்கூடும் என சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
எனவே புத்தாண்டுக்கு முன்னரோ அல்லது புத்தாண்டின் போதோ பயணங்களை மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களில் அது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை தவிர்க்க்குமாறு அறிவிறுத்தப்பட்டுள்ளது.