
முல்லைத்தீவு மாவட்டத்தின் பறங்கியாற்று பகுதியில் அனுமதிப்பத்திர விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மணலுடன் இரண்டு உழவு இயந்திரங்கள் மற்றும் அதன் சாரதிகள் நட்டாங்கண்டல் பொலிசால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நட்டாங்கண்டல் குற்றப்புலனாய்வு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள இரு உழவு இயந்திரங்ளையும் மாங்குளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வாகன சாரதிகள் இருவரும் பிணையில் செல்ல அனுமதித்துள்ளதாகவும்பொலிஸார் தெரிவித்தனர்.