
அடுத்த 2 மாதம் கவனமாக இருக்க வேண்டும் என கான்பூர் ஐஐடி தெரிவித்திருக்கிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்தார். தமிழ்நாட்டில் கொரோனா நான்காவது அலை வராது என்றும், வந்தாலும் அதனை விரட்ட, மருத்துவ கட்டமைப்பு பலமாக உள்ளதென்றும் கூறினார். கேரளா, மலேசியா, சிங்கப்பூர், தென் கொரியா, சீனாவில் ஏராளமானோருக்கு கொரோனா தொற்று உருவாகி வருகிறது; அடுத்த 2 மாதம் கவனமாக இருக்க வேண்டும் என கான்பூர் ஐஐடி தெரிவித்திருக்கிறது என தெரிவித்தார்.