ரகசிய இடத்தில் 4 குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் ரஷ்ய அதிபர் புடினின் காதலியை நாடு கடத்த வேண்டும் என்று சுவிட்சர்லாந்து அரசிடம் 63,000 பேர் கையெழுத்திட்ட மனுவை அனுப்பி உள்ளனர்.
உக்ரைன் மீது ரஷ்யா போரை நடத்தி வரும்நிலையில், அதிபர் விளாடிமிர் புடினின் காதலியும், ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையுமான அலினா கபேவா (38), இந்த மாத தொடக்கத்தில் சுவிட்சர்லாந்தில் உள்ள தனியார் பங்களாவுக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
முன்னதாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ரஷ்யா, பெலாரஸ் மற்றும் உக்ரைன் மக்கள் சார்பில் சுவிட்சர்லாந்து நாட்டுக்கு மனு ஒன்றை அனுப்பப்பட்டது. அதில், ‘அலினா கபேவாவை சுவிட்சர்லாந்தில் இருந்து வெளியேற்றி ரஷ்யாவிற்கு நாடு கடத்த வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவில் 63,000க்கும் மேற்பட்ட கையொப்பங்கள் உள்ளதாக ‘டெய்லி மெயில்’ செய்தி வெளியிட்டுள்ளது. அல்தாய் மலைகளில் அமைந்துள்ள புடினின் ரகசிய இடத்தில் அலினா கபேவா மறைந்திருப்பதாக சிலர் கூறுகின்றனர்.அலினா கபேவாவுக்கும், புடினுக்கும் நான்கு குழந்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் ஐவரையும் அதிபர் புடின் இதுவரை அதிகாரப்பூர்வமாக பொதுவெளியில் காட்டவில்லை. புடினின் ரகசிய காதலி என்று கூறப்படும் கபேவாவை, மேற்கத்திய நாடுகள் இதுவரை தங்களது நாடுகளில் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.