
2021 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இன்றிரவு வெளியிடுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கவுள்ளதாக கல்வியமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
2021ஆம் ஆண்டு தரம் 5 க்கான புலமைப் பரிசில் பரீட்சை, கடந்த ஜனவரி மாதம் 22ஆம் திகதியன்று நடைபெற்றது.
குறித்த பரீட்சையில் தமிழ் மொழிமூலத்தில் 85,446 மாணவர்களும், சிங்கள மொழிமூலத்தில் 255,062 மாணவர்களும், மொத்தமாக 340,508 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.
இப்பரீட்சை 2,943 பரீட்சை நிலையங்களில் இடம்பெற்றதுடன், கொவிட்-19 தொற்றுக்குள்ளான மாணவர்களுக்காக, 108 விசேட பரீட்சை நிலையங்கள் செயற்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.