இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை கனியவள கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது.
இதற்கமைய, லங்கா ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 55 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.அதன்படி, லங்கா ஒட்டோ டீசலின் புதிய விலை 176 ரூபாவாகும்.
ஒக்டென் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 77 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.அதன்படி, ஒக்டென் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 254 ரூபாவாகும்.
ஒக்டென் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 75 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 283 ரூபாவாகும்.லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 95 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 254 ரூபாவாகும்.அதேநேரம், லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தமது எரிபொருட்களின் விலையை அதிகரித்தது.
இதன்படி, டீசல் லீற்றர் ஒன்றின் விலையை 75 ரூபாவினாலும், பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 50 ரூபாவினாலும், லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் உயர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.