ஜனாதிபதிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் வரும் 15 ஆம் திகதி சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
15 ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதியை கூட்டாக சந்திக்க தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பலதடவை முயன்ற வேளையில் தற்போது அந்த சந்தர்ப்பம் கைகூடியுள்ளது.
இந்த சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் யார் சந்திப்பில் இடம்பெறுவர் என்பது தொடர்பான விபரங்கள் இன்னமும் வெளியாகவில்லை .