அரச ஊழியர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவை நிறுத்தும் சுற்றறிக்கையை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே இந்தக் கோரிக்கையினை முன்வைத்திருந்தார்.
அரச உத்தியோகத்தர்களுக்கான மாதாந்த விசேட எரிபொருள் கொடுப்பனவுகள் முற்றாக நிறுத்தப்படுவது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது.
அரச ஊழியர்கள் என்பவர்கள் மக்கள் சேவையாளர்கள். அவர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே மக்கள் சேவை புரிகின்றனர் என சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
எனவே அரச உத்தியோகத்தர்களுக்கான மாதாந்த விசேட எரிபொருள் கொடுப்பனவுகள் முற்றாக நிறுத்தப்படுவது தொடர்பான அறிவிப்பு அரச ஊழியர்களுக்கு பெரும் சுமையாகவும் ஏமாற்றமாகவும் மாறியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகையால் அரச ஊழியர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவை நிறுத்தும் பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையை அரசு மீள்பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.