கரடிப்போக்கு கால்வாயிலிருந்து சடலம் மீட்பு – சந்தேகநபர் கைது

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரடிப்போக்கு கால்வாயிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .

கிளிநொச்சி பகுதியில் உள்ள மரக்காலை ஒன்றில் வேலை செய்துவந்த நவநீதன் எனும் 48 வயதானவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த மரணம் விபத்தால் ஏற்பட்டிருக்கலாம் எனவும் விபத்து இடம்பெற்றமைக்கான தடயங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டிருந்தனர். இதற்கமைய விபத்து ஏற்படுத்தியமையாலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

விபத்தை ஏற்படுத்திய ஹயஸ் ரக வாகனம் திருத்துவதற்காக வவுனியாவில் உள்ள ‘கராச்’ ஒன்றில் விடப்பட்டுள்ளது. இது தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து வாகன சாரதியைக் கைதுசெய்ததுடன் குறித்த ‘ஹயஸ்’ வாகனமும் கைப்பற்றப்பட்டது.

கைதுசெய்யப்பட்ட சாரதியையும் வாகனத்தையும் கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE