
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆசிய பிரதிநிதியுடன் இன்றைய தினம் தமிழரசு கட்சி தவிர்ந்த ஐந்து தமிழ் தேசிய கட்சிகள் கலந்துரையாடவுள்ளன.
தொலைகாணொளி ஊடாக இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேம சந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த தமிழ் தேசிய கட்சிகள் இணைந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளன.