தற்போது அண்டை நாடுகள் உக்ரைன் இராணுவத்திற்கு மறைமுகமாக உதவிகள் செய்து வருகின்றன. நேட்டோ நாடுகள், அமெரிக்கா, கனடா உள்ளிட்டவை ஆயுதம் , நிதி உதவி அளித்து வருகின்றன.
இதனைத் தொடர்ந்து தற்போது நெதர்லாந்து 200 ரொக்கெட்டுகளை அளிக்க உள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. பதுங்குகுழிகளை கண்டறியும் தானியங்கி ரோபோக்கள், ரேடார் கருவிகள், அதிநவீன துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் ஆகியவற்றையும் நெதர்லாந்து அரசு உக்ரைனுக்கு அனுப்பியுள்ளது .
ஆனால் ரஷ்யாவின் ஆயுத பலத்திற்கு முன்னர் உலக நாடுகள் உக்ரைனுக்கு அளிக்கும் இந்த ஆயுதங்களின் பலம் மிகவும் குறைவு என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். எது எப்படி இருந்தாலும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி உலக நாடுகளின் இந்த ஆயுதங்களைப் பயன்படுத்தி தொடர்ந்து தனது இராணுவம் மூலமாக ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. உக்ரைன்-ரஷ்ய மோதல் நீடித்துவரும் நிலையில் 200 வான் தற்காப்பு ராக்கெட்களை நெதர்லாந்து உக்ரைனுக்கு வழங்கியுள்ளது.