நாடளாவிய ரீதியில் நாளையும்(24) 4 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக, அதன் தலைவர் ஜனக்க ரத்நாக்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய A,B மற்றும் C ஆகிய வலயங்களில் 04 மணித்தியாலங்கள் 40 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
ஏனைய பகுதிகளில் 04 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.