வவுனியாவில் சம்பள உயர்வு கோரி முன்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

சம்பள உயர்வுகோரி வவுனியா வடக்கு முன்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் இன்று ஈடுபட்டனர். வவுனியா உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்திற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்த போது, பலவருடங்கள் சேவைக்கலாம் எமக்கு காணப்படுகின்றபோதும் எமக்கான நிரந்தர நியமனம் மற்றும் சம்பள உயர்வு தீர்க்கப்படாமல் இருக்கின்றது.சாதாரண தொழிலாளியின் அடிப்படை சம்பளமான 13 ஆயிரம் ரூபாயை கூட எம்மால் பெற்று கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வருடாவருடம் ஆர்ப்பாட்டங்களை மாத்திரம் முன்னெடுத்து வருகின்றோம். எனினும் எமக்கான தீர்வுகள் மாத்திரம் வழங்கப்படவில்லை. முன்பள்ளி ஆசிரியர்களான நாம் பல்வேறு சமூக பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. பௌதீக வளப்பற்றாக்குறை, அரசியல் தலையீடு அபிவிருத்தி பின்னடைவு தனியார் பள்ளிகளின் அதிகரிப்பு ஆகியவற்றால் பல்வேறு பிரச்சினைகளை நாம் எதிர்நோக்கி வருகின்றோம்

எமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முன்பள்ளிகல்வியின் முக்கியத்துவம் பற்றி உயர் அதிகாரிகள் உணராது இருப்பது துரதிஸ்டவசமாகவே காணப்படுகின்றது. எமது வலயத்தில் மாத்திரம் 120 ஆசிரியர்கள் மிகவும் குறைந்த கொடுப்பனவுடன் கடமையாற்றி வருகின்றனர்.

எனவே எதிர்கால சந்ததியினர் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிப்பதற்கு முன்பிள்ளை பருவக்கல்வியே துணைபுரியும் என்பது திண்ணம். எனவே நாளைய சமூகத்தின் நலனில் அக்கறை கொண்ட தலைவர் எனும் வகையில் பெண்களின் சமூகபொருளாதார பிரச்சினைகளைகளையும் வகையிலும் உரிய அதிகாரிகள் எமது பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை வடமாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜா சந்தித்து கலந்துரையாடியதுடன் ஒரு வாரத்தில் இந்தப்பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE