பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மானிய விலையில் கோதுமை மா வழங்கும் திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 80 ரூபா விலையில் மாதாந்தம் 15 கிலோ கோதுமை மாவை வழங்குவதற்கு நிதி அமைச்சு எடுத்திருந்த தீர்மானத்திற்கு கடந்த வாரம் அமைச்சரவை அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே குறித்த திட்டம் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த திட்டம் ஆரம்பகட்டமாக நுவரெலியா – வட்டகொடை மடக்கும்புர தோட்டத்தில் வைபவ ரீதியாக இடம்பெற்றதுடன், இதில் குறித்த தோட்டத்தில் 71 குடும்பங்களுக்கு இந்த கோதுமை மா வழங்கப்பட்டன.
அடுத்த கட்டமாக எதிர்வரும் காலங்களில் ஏனைய தோட்டங்களுக்கும் கோதுமை மா வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.