கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இம்மாத இறுதியில் வத்திகானுக்கு பயணம் மேற்கொள்ள தீர்மானித்துள்ளார்.
கர்தினால் தனது இந்த பயணத்தின் போது, புனித பாப்பரசர் உட்பட வத்திகானின் உயர் அதிகாரிகளை சந்தித்து, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான தற்போதைய நிலைமை சம்பந்தமாக தெளிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதனை அமெரிக்கா கத்தோலிக்க திருச்சபை பேராயருடன் கடந்த சில தினங்களாக தொலைபேசி வழியாக பேச்சுவார்த்தைகளை நடத்தி, ஈஸ்டர் விவகாரம் குறித்த தகவல்களை பரிமாறிக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனும் கத்தோலிக்கர் என்பது விசேட அம்சமாகும்.
எது எப்படி இருந்த போதிலும் கர்தினாலின் வத்திகான் பயணம், இலங்கை அரசுக்கு மேலும் சிக்கலை உருவாக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.