காதலர் தினம் என்று கூறாமல் காதலர் தினம் கொண்டாட சவுதி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது நகைப்புக்குள்ளாகியுள்ளது.
உலகம் முழுவதும் நாளை வேலன்டைன்ஸ் டே எனப்படும் காதலர் தினம் பல நாடுகளில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. 90களில் மேலை நாடுகளில் மட்டுமே பிரபலமாக இருந்த இந்த தினம் தற்போது ஆசிய நாடுகள் மத்திய தரைக்கடல் நாடுகளில் பிரபலமாகி வருகிறது.
கட்டுப்பாடுகள் நிறைந்த இஸ்லாமிய நாடுகளிலும் இந்த தினம் பிரபலமாகி வருவதால் காதலர்கள் வீதி எங்கும் உலா வர துவங்கி விட்டனர். இவர்களை கவர்வதற்காக உலக நாடுகளில் வியாபாரிகள் பலர் காதலை கொண்டாடும் பல பொருட்களை விற்பனை செய்வது வழக்கம்.
சிவப்பு நிறத்திலான உடைகள் பரிசுப் பொருட்கள் என இந்த நாளை ஒட்டி வியாபாரம் எப்போதும் களைகட்டும். இவற்றை காதலர்கள் வாங்க அதிக ஆர்வம் காட்டுவர். சிவப்புநிற ஆர்டின் பொம்மைகள், தலையணைகள், உடைகள் என கடைகள் அனைத்திலும் சிவப்பு நிற பொருட்கள் இந்தநாளில் நிரம்பி வழியும்.
சவுதி அரேபியாவில் இந்த தினம் கொண்டாட அனுமதிக்கப்பட்ட போதிலும் அந்நாட்டு வியாபாரிகளுக்கு சவுதி அரசு கட்டுப்பாடு ஒன்றே விதித்துள்ளது. அங்காடிகளில் இதுபோன்ற சிவப்பு நிற காதலர் தின கொண்டாட்டங்களுக்காக பொருட்களை விற்பனை தவிர கடையில் எங்கும் வேலன்டைன்ஸ் டே என்கிற பதாகை, வாசகம் இடம் பெறக்கூடாது, அந்த வார்த்தையையும் வாடிக்கையாளரிடம் பயன்படுத்தக் கூடாது என வித்தியாசமான ஓர் உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலமாக இஸ்லாமிய நாடான சவுதி அரேபியா தனது கட்டுப்பாட்டை நிலைநாட்டுவதில் நினைத்துக்கொண்டு இதுபோன்று செயல்படுவது இணையத்தில் வேடிக்கைக் உள்ளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.