அரச தாதியர் சங்கம் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து முன்னெடுப்பதை தடுக்கும் வகையில் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
அரச தாதியர் சங்கம் மற்றும் அதன் தலைவர் சமன் ரத்னபிரிய ஆகியோருக்கு நீதவான் அருண அளுத்கே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையை உடனடியாக இடைநிறுத்துமாறு நீதிமன்றத்திடம் உத்தரவு பிறப்பிக்கக் கோரி சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக வைத்தியசாலைகளில் நோயாளர் பராமரிப்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி விக்கும் டி ஆப்ரூ நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து, கொழும்பு நீதவான் அருண அளுத்கே இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளார்.