
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள வெளி விவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கருக்கும் இடையில் இன்று (07) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பானது ஐத்ராபாத் இல்லத்தில் இன்று மாலை இடம்பெறவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த சந்திப்பின் போது, இந்திய வெளியுறவுச் செயலாளர் ஹர்ஸ் வர்தன் சிறிங்லாவையும் (Harsh Vardhan Shringla) வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் சந்தித்து கலந்துரையாடுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும், இரண்டு நாட்டு மீனவர்களின் பிரச்சினைகள் என்பன குறித்தும் இதன்போது, கலந்துரையாடப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.